வியக்க வைக்கும் தமிழர் அறிவியல்

by GOKILAVANI 2014-03-19 09:38:41

சித்தர் என்ற சொல்லுக்குச் சித்தமானவர்கள் என்றும் பொருள் உண்டு.

அவர்கள் அறிவியலை ஞானமாக்கியவர்கள். அவர்கள்மனித வாழ்க்கைக்குச் சித்தமானதைக் கண்டு சொன்னார்கள்.
உணவை உண்பதில் மருத்துவம் சார்ந்த நெறிமுறைகளைஏற்படுத்தினார்கள்.

சுகவாழ்வுக்காக அறிவியல்ரீதியான சில வழக்கங் களை ஏற்படுத்தினார்கள்.

அவ்வாறு வந்தது தான் மனிதனின் தலைமுடி அளவு குறைவாய் இருத்தல் என்பது ஆரோக்கியமானது என்பது அவர்களின்கண்டுபிடிப்பு.

ஆடவர்கள் இடுப்பில் கட்டுகிற அரைஞாண்கயிறு ஒரு நோய் தடுப்பு முறையாக வந்திருக்கிறது என்பது இன்று பலருக்குத்தெரியாது.

ஆடவர்களுக்குப் பொதுவாக குடல் இறக்க நோய் வருவதுண்டு.

அந் நோயைத் தடுக்கவே இடுப்பில் அரைஞாண்கயிறு முன்பெல்லாம் கட்டுகிற பழக்கம் தமிழர்களிடையே இருந்தது.

பிறகு அக்கயிறு வெள்ளிக்கொடியாக மாறியது. இன்றைக்குஅநாகரீகம் எனக் கருதி அரைஞாண்கயிறும் கட்டுவதும் குறைந்து விட்டது.

வாரத்தில் ஒருநாள் மாதத்தில் பலநாள் பட்டினி(சில நோயாளிகள் தவிர்ந்த)யாய் இருப்பது உடலுக்கு நல்லது என்பதுபழந்தமிழன் மருத்துவம்.

பட்டினி இருப்பதால் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற முடிகிறது.

நோய் எதிர்ப்பாற்றலைமிகுதிப்படுத்தலாம்.நோய்க் கிருமிகள் பரவாமல் தடுக்கலாம்.

உடலில் உள்ள மோசமான கிருமிகளை அழிக்கலாம் என்பது ஒருநம்பிக்கை.

இவற்றை நனைவில் கொண்டுதான் தவஞானிகள் உண்ணாவிரதத்தையும் பேசா விரதத்தையும் ஒருநாள் (வாரம் ஒரு முறை)பின்பற்றினர்.

அதிகாலைத் துயில் எழுதல் உடல் நலத்திற்கு நல்லது.

நீண்ட வயது வாழ்ந்தவர்கள் பெரும்பாலானவர்கள்அதிகாலை எழுபவர்களாகத்தான் இருப்பார்கள்.

அதிகாலையில் காற்று தூய்மையாக இருக்கும். சுத்தமான பிராணவாயுதெருக்களில் அப்போது கிடைக்கும்.

குறிப்பாக மார்கழி, தை மாதங்களில் மிக நல்ல தரமான பிராண வாயு கிடைக்கும்.
இது பூமி சுழற்சியினால் ஏற்படும் செயல்.

எனவேதான் இதனை சுவாசிக்கும் பொருட்டு ஆண்கள் மார்கழி பஜனைக்குப் போக வைக்கப்பட்டார்கள். பெண்களை வீட்டுவாசலில் கோலம் போட வைத்தார்கள்.

கோலம் போடுவது பண்பாட்டு மரபு. அதே நேரத்தில் நம் கண்ணுக்குத் தெரியாத சிறிய உயினங்களுக்கு உணவுக் கொடைஇடுவதே முக்கியமானது. ஆனால் இன்று தானிய மாவைத் தவிர்த்து வெள்ளைக்கல்லை அரைத்து மாவாக்கிக் கோலம்போடுகிறார் கள்.

இந்த வெள்ளைக் கல் மாவு காற்றிலே கலந்து மனிதர்களின் மூச்சிலே இணைந்து நலத்திற்கு கேட்டைவிளைவிக்கும்.

வேப்பிலை மரம் செய்யும் நன்மை- அது காற்றைத் தூய்மைப்படுத்துகிறது,நிழல் தருகிறது, தொற்று நோய்களைத் தடுக்க உதவுகிறது, அம்மை நோய் கண்டவர்களுக்கு வேப்பிலைப் படுக்கைசுகமானது, வயிற்றுப் புண், குஷ்டம், சர்க்கரை நோய்களுக்கு அதன் இலைகள் அருமருந்து. எனவே தான் தமிழர்களோடுவேப்பமரம் மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கிறது.

வில்வ இலையில் மருத்துவம் இருக்கிறது. உடலில் உள்ள ஐம்பூதங்களைச் சமநிலைப்படுத்துவது அதன் தீர்த்தம். எனவேதான் சிலகோயில்களில் வில்வ இலைத் தீர்த்தம் வழங்கப்படுகிறது.

வாழைப்பழம் புத்திசாலிகள் சாப்பிடும் பழம். ஏழைகளின் ஆப்பிள்.உண்பவருக்குப் பல நன்மைகள் இப் பழத்தால் கிடைக்கின்றன.

தொடர்ந்து வாழை இலையில் உண்பவர்களின் கண்களுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும். அதன் தண்டுகள் சிறுநீர்க்கல்அடைப்புகளை நீக்கும். எனவே தான் மருந்தாகப் பயன்படுகிற மரங்களைப் பழந்தமிழர் வீட்டுத் தோட்டத்துக்குள் கொண்டுவந்தனர்.

தமிழன் வீட்டுத் தோட்டத்து மரங்கள், செடிகள், கொடிகள் உணவிற்கும் மருந்திற்கும் பயன்படுகின்றன

இஞ்சிச் செடியில் கிடைக்கும் இஞ்சி செரிமானத்திற்கு உதவும்.மஞ்சள் செடியின் மஞ்சள் பூசிக் குளிக்க உதவும். மஞ்சள் சிறந்த ஒரு கிருமி நாசினி. ஆகவேதான் மஞ்சள் தூளைத் தண்ணீல்கரைத்து வீட்டு வாசலில் தெளிப்பார்கள்.

கிராமத்து திருவிழாக்களில் மஞ்சள் நீராட்டுதல் ஒரு அர்த்தத்தோடு வந்ததுதான்.

கீழாநெல்லி மஞ்சள் காமாலை நோய்க்கு அருமருந்தாகும். அந்த மருந்து ஆங்கில மருந்தைவிடபலனை அள்ளித் தரவல்லது.
அதன் சக்தி உணர்ந்த மேல்நாட்டு விஞ்ஞானிகள் கீழாநெல்லியை மாத்திரையில் கொண்டுவந்துள்ளனர்.

இது தமிழர் மருத்துவத்திற்குக் கிடைத்த அங்கீகாரமாகும்.

1108
like
1
dislike
0
mail
flag

You must LOGIN to add comments