மன்னாதி மன்னன் - அச்சம் என்பது மடமையடா

by Sanju 2010-02-09 22:28:28

மன்னாதி மன்னன்

பாடல்: அச்சம் என்பது மடமையடா
குரல்: டி எம் சௌந்தரராஜன்


அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா

(அச்சம்)

கனகவிஜயரின் முடித்தலை நெறித்து
கல்லினை வைத்தான் சேர மன்னன்
இமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி
இசை பட வாழ்ந்தான் பாண்டியனே

(அச்சம்)

கருவினில் மலரும் மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை
களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம்
காத்திட எழுவான் அவள் பிள்ளை

(அச்சம்)

வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்

(அச்சம்)

Tagged in:

1317
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments