வேற்றுமையுருபு

by Geethalakshmi 2010-02-28 22:44:53

வேற்றுமையுருபு


வேற்றுமையுருபு - தமிழில் எட்டு வகையான வேற்றுமைகள் உள்ளன. அவை,

1. முதலாம் வேற்றுமை அல்லது எழுவாய் வேற்றுமை
2. இரண்டாம் வேற்றுமை
3. மூன்றாம் வேற்றுமை
4. நான்காம் வேற்றுமை
5. ஐந்தாம் வேற்றுமை
6. ஆறாம் வேற்றுமை
7. ஏழாம் வேற்றுமை
8. எட்டாம் வேற்றுமை அல்லது விளி வேற்றுமை


முதலாம் வேற்றுமைக்கு உருபு கிடையாது.

* (எ-டு) மரம், மனிதன், பறவை.

இரண்டாம் வேற்றுமையின் உருபு 'ஐ' ஆகும்.

* (எ-டு) மரத்தை, மனிதனை, பறவையை.

மூன்றாம் வேற்றுமையின் உருபு 'ஆல்' ஆகும்.

* (எ-டு) மரத்தால், மனிதனால், பறவையால்.

நான்காம் வேற்றுமையின் உருபு 'கு' ஆகும்.

* (எ-டு) மரத்திற்கு, மனிதனுக்கு, பறவைக்கு.

ஐந்தாம் வேற்றுமையின் உருபு 'இன்' ஆகும்.

* (எ-டு) மரத்தின், மனிதனின், பறவையின்.

ஆறாம் வேற்றுமையின் உருபு 'அது' ஆகும்.

* (எ-டு) மரத்தினுடையது, மனிதனது, பறவையினுடையது.

ஏழாம் வேற்றுமையின் உருபு 'கண்' ஆகும்.

* (எ-டு) மரத்தின்கண், மனிதன்கண், பரவையின்கண்.

எட்டாம் வேற்றுமைக்கும் உருபு கிடையாது. இது, 'ஐயோ', 'ஆகா' போன்ற விளிச் சொற்களையே கொண்டு வரும்.

* (எ-டு) ஓ மரமே, ஓ மனிதனே, ஓ பறவையே.
1665
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments