கோட்பாட்டு மொழியியலின் முக்கிய துறைகள்

by Geethalakshmi 2010-03-01 00:32:45

கோட்பாட்டு மொழியியலின் முக்கிய துறைகள்


ஒலியியல்

கோட்பாடு மொழியியலின் ஒரு துணைத் துறையான ஒலியியல், பேச்சொலிகள் பற்றி உயர்ந்த மட்டத்தில் ஆராயும் ஒரு துறையாகும். இது, மனித மொழியில் ஒலிகளின் அமைப்பு, அவற்றின் ஒழுங்கமைவு என்பன பற்றி ஆராய்கிறது. ஒலிப்பியலிலிருந்து ஒலியியல் பகுப்பாய்வுக்காகத் தகவல்களைப் பெற்றுக்கொள்கிறது.

உருபனியல்

உருபனியல் சொற்களின் அமைப்புத் தொடர்பான ஆய்வுத் துறையாகும்.

சொற்றொடரியல்

சொற்றொடரியல் மொழியமைப்புப் பற்றியும், சொல் ஒழுங்குகள் பற்றியும் ஆராயும் ஒரு துறை.

சொற்பொருளியல்

சொற்பொருளியல், சொற்களினதும், சொற்றொடர்களினதும் செறிவான பொருள் பற்றி ஆய்வு நடத்துகின்ற ஒரு துறையாகும்.
1571
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments