இந்த மனிதர்களே இப்படித்தான்!

by sabitha 2010-03-06 17:25:35

ஒரு ஓநாய் மிகுந்த பசியுடன் காட்டில் அலைந்து திரிந்தது.
உணவு ஒன்றுமே கிடைக்கவில்லை. சரி! நகரத்திற்கு
போவோம் என முடிவு செய்து நகரத்துக்குள் நுழைந்தது.

ஒரு வீட்டின் வாசலுக்கு வந்தது. வீட்டில் இருந்த சின்னக்
குழந்தை ஒன்றின் அழுகுரல் கேட்டது.

அதன் அம்மா, “”நீ அழுவதை நிறுத்தாவிட்டால் உன்னை
ஓநாயிடம் பிடித்துக் கொடுத்து விடுவேன்,” என்று மிரட்டினாள்.
உடனே குழந்தையும் அழுகை சத்தத்தை நிறுத்தியது. இதைக்
கேட்ட ஓநாய் நிஜம் என்று நம்பி, வாசலில் ஆவலுடன்
மறைந்திருந்தது.

சிறிது நேரத்தில் குழந்தையைக் கொஞ்சிய தாய்
“என் செல்லத்தைப் பிடிக்க ஏதாவது ஓநாய் வரட்டும். அதை
உன் அப்பாவை விட்டுக் கொன்று விடுவேன்,” என்று கூறினாள்.

இதைக் கேட்ட ஓநாய், “”அட இந்த வீட்டில் யாரையும் நம்ப
முடியாது போலிருக்கே. எப்படிப் பொய் பேசுகின்றனர்.
இந்த மனிதர்களே இப்படித்தான்!” என்று சலித்துக் கொண்டே
ஓடிப்போனது.

Tagged in:

2002
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments