செஙகீரைப் பருவம் - முருகன் பிள்ளைத்தமிழ்

by Geethalakshmi 2010-04-29 22:21:27

செஙகீரைப் பருவம் - முருகன் பிள்ளைத்தமிழ்


தங்கத்தை மெருகூட்டிச் செய்த பொன்னுரு

கொண்டு தமிழே ஆகிவிட்ட

மங்காப் புகழ்கொண்டு மாவரக்கன் தனை ஒழித்து

தேவர் துயரம் போக்கிவிட்ட

சிங்கத்தின் வீரமே சிறுகுழந்தையே!

செங்கீரை ஆடி அருளே!

தங்கவைத்தால் நினைத் தன்னுள்ளத்தில்

என்ன வந்தாலும் அருள் புரியும்

பொங்குமா கடலே, பொதிகைத் தென்றலே

செங்கீரை ஆடி அருளே!
1575
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments