கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு: பிளிண்டாப்

by Rameshraj 2010-09-17 09:52:18

லண்டன், செப். 16: இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பிளிண்டாப் அனைத்து கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக வியாழக்கிழமை அறிவித்தார்.

முழங்கால் காயத்தால் அவதிப்பட்டு வந்த பிளிண்டாப் சென்ற ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். எனினும் ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் இருந்து அவர் ஓய்வு பெறவில்லை. இந்நிலையில் வியழக்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பது:

"எந்த போட்டியிலும் இனி நான் விளையாட மாட்டேன். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன். மருத்துவர்களை கலந்து ஆலோசித்த பின் இந்த முடிவை அறிவிக்கிறேன். என் உடல் நலத்தை காக்க வேறு வழியின்றி வருத்தத்துடன் இந்த முடிவை எடுத்துள்ளேன்.' என்றார்.

Tagged in:

1734
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments