குர்ஆன் குறித்து நபிமொழிகள் கூறுவது

by Geethalakshmi 2012-01-25 13:53:03

குர்ஆன் குறித்து நபிமொழிகள் கூறுவது


1. நிச்சயமாக இந்தக் குர்ஆன் பரிந்துரை செய்யக்கூடியதாகும். அது ஏற்கப்படக்கூடியதுமாகும். அதனைப் பின்பற்றினால் அவரை அது சுவனத்தில் சேர்க்கும். அதனை பின்பற்றாமல் விட்டு விட்டால் அல்லது நிராகரித்தால் அவன் நரகின் அடித்தளத்தில் தள்ளப்படுவான். (முஸ்லீம் - இப்னு மஸ்வூத்(ரலி))
2. குர்ஆனின் விஷயத்தில் தர்க்கம் புரிவது இறை மறுப்புச் செயலாகும் - அபூதாவூத் - அபூஹுரைரா(ரலி)
3. குர்ஆனைத் தானும் கற்று பிறருக்கும் கற்றுக் கொடுப்பவரே உங்களில் சிறந்தவர். (புகாரி - உஸ்மான்(ரலி))
4. இக்குர்ஆனின் ஒரு முனை அல்லாஹ்வின் கையிலும் மறுமுனை உங்கள் கைகளிலும் உள்ளது. எனவே இதனை உறுதியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் இம்மையில் வழிதவறமாட்டீர்கள், மறுமையில் அழிவுறவும் மாட்டீர்கள். (நூல்: தப்ரானி - அபூஹுரைரா(ரலி))
5. பேச்சுக்களில் மிகச் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிகாட்டுதல்களில் மிகச்சிறந்தது முஹம்மது(ஸல்)வின் பாதையாகும். தீனில் தீமையானது மார்க்கத்தில் புதிதாகப் புகுத்தப்பட்டதாகும். ஒவ்வொரு பித் அத்தும் வழிகேடாகும். (நூல்: முஸ்லீம்)
6. இவ்வேதத்தைக் கொண்டே அல்லாஹ் சில கூட்டத்தாரை உயர்த்துகிறான். மற்றோரு கூட்டத்தினரை இதனைக் கொண்டே தாழ்த்துகிறான். சமுதாய உயர்வு, தாழ்வுக்கு காரணம் குர்ஆனே. (நூல்: முஸ்லீம்- உமர்(ரலி))
7. குர்ஆனின் சிறு பகுதியேனும் யார் உள்ளத்தில் மனனம் இல்லையோ அவர் உள்ளம் பாழடைந்த வீட்டைப் போன்றது. (திர்மிதி - இப்னு அப்பாஸ்(ரலி))
8. குர்ஆனில் யார் ஒரு எழுத்தைப் படிக்கிறாரோ அவருக்கு ஒரு நன்மை உண்டு. ஒரு நன்மை அதனைப் போன்று பத்து நன்மையாகிறது. (திர்மிதி - இப்னு மஸ்வூத்(ரலி))
9. யார் குர்ஆனை மனனம் செய்து விட்டு மறந்து விடுவார்களோ அவர்கள் மறுமையில் முகத்தில் சதை இல்லாமல் வருவார்கள்.
10. யார் குர்ஆனை இராகமாக (தஜ்வீத்) ஓதவில்லையோ அவர் நம்மைச் சார்ந்தவரல்ல. (நூல்: அபூதாவூத் - பசீர் பின் அப்துல் முன்திர் (ரலி))
11. குர்ஆன் உயிருடன் இருக்கும் போதே படித்து நேர்வழி பெறுவதற்குத்தானேயொழிய இறந்த பின் குர்ஆனை மரணித்தவர்களுக்கு அதனை அஞ்சல் செய்வதற்கு இல்லை.
''(இது) உயிரோடிருப்பவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறது. நிராகரிப்பவர்களுக்கு (தண்டனை உண்டு என்ற) வாக்கை உண்மையென உறுதிப் படுத்துகிறது.(36:70)''
1303
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments