மெல்ல விடை கொடு போய் வரவா பாடல் வரிகள் - துப்பாக்கி

by Geethalakshmi 2012-11-19 14:48:54

மெல்ல விடை கொடு போய் வரவா பாடல் வரிகள் - துப்பாக்கி
மெல்ல விடை கொடு விடை கொடு மனமே
இந்த நினைவுகள் நினைவுகள் கணமே
தாய் மன்னே செல்கின்றோம் தூரம் தூரம்

இங்கு உறவுகள் பிரிவுகள் வருதே
சில அழகிய வலிகளும் தருதே
போகின்றோம் போகின்றோம் தூரம் தூரம்

ஒ .. எனை விட்டு செல்லும் உறவுகளே
ஒ .. உள் தொட்டு செல்லும் உணர்வுகளே

போய் வரவா ..? போய் வரவா ..?

நண்பன் முகம் நெஞ்சில் நடந்து போகும்
காதல் தென்றல் கூட கடந்து போகும்
இப்பயணத்தில் உன் நினைவுகள் நெஞ்சடைகுமே
காடு மலை செல்ல துவங்கும் போதும்
நெஞ்சில் சொந்தங்களின் நினைவு மோதும்
கை குழந்தையை அணைக்கவே .. மெய் துடிக்குமே ..
ஆயிரம் ஆயிரம் என்ன அலைகள் அலைகள் அலைகள் நெஞ்சோடு
ஆயினும் ஞாபகம் உயிர் துடிப்பாய் துடிக்கும் எங்கள் மண்ணோடு

போய் வரவா ..? போய் வரவா ..?

எங்கே மகன் என்று எவரும் கேட்க
ராணுவத்தில் என தாயும் சொல்ல
அத்தருணம் போல் போர் பாதக்கங்கள் கை கிடைக்குமா
நாடுக்கேண்ட்ரே தன்னை கொடுத்த வீரம்
ஆடை மட்டும் வந்து வீடு சேரும்
அப்பெருமை போல் இவுலகிலே வேர் இருக்குமா ?
தேசமே தேசமே என் உயிரின் உயிரின் உயிரின் தவமாகும்
போரிலே காயமே என் உடலின் உடலின் உடலின் வரமாகும்

போய் வரவா ? போய் வரவா ?

மெல்ல விடை கொடு விடை கொடு மனமே
இந்த நினைவுகள் நினைவுகள் கணமே
தாய் மன்னே செல்கின்றோம் தூரம் தூரம்

இங்கு உறவுகள் பிரிவுகள் வருதே
சில அழகிய வலிகளும் தருதே
போகின்றோம் போகின்றோம் தூரம் தூரம்

ஒ .. ஒ .. ஒ .. ஒ ஒ ஒ ..
என்னை விட்டு செல்லும் உறவுகளே
ஒ .. ஒ .. ஒ .. ஒ ஒ ஒ ..
உள் தொட்டு செல்லும் உணர்வுகளே

போய் வரவா ..? போய் வரவா ..?
1663
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments