தமிழ் சுட்டெழுத்து

by Francis 2013-04-06 16:08:58


சுட்டெழுத்து என்பது ஒரு குறிப்பிட்ட பொருளையோ மனிதரையோ சுட்டி காட்டும் பொருளில் வரும் எழுத்தாகும்.

உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்
மேனி பசப்பூர் வது
குறள் - 1185
பொருள் : முன்பும்கூட, அந்தப் பக்கம் என் அன்பர் போயிருப்பார்; இந்தப் பக்கம் என் மேனி பசலை கொண்டு விடும். முன்பே அப்படி என்றால் இப்போது எப்படி இருக்கும்?

'அ', 'இ', உ' என்ற மூன்று எழுத்துகளும் சுட்டெழுத்துகள்
'அகரம்' பேசுவோனுக்கும் கேட்போனுக்கும் சேய்மையிலுள்ள பொருளையும்; 'இகரம்' பேசுவோனுக்கு அண்மையிலுள்ள பொருளையும்; 'உகரம்' கேட்போனுக்கு அண்மையிலுள்ள பொருளையும் குறிக்கும்.

மறைந்து போன சுட்டெழுத்து "உ"
நமக்கு வருத்தம் தரக்கூடியவை, தற்காலத்தில் 'உ' என்ற சுட்டெழுத்து தமிழ்நாட்டில் வழக்கில் இல்லை.
ஆனால், "உ" சுட்டெழுத்து யாழ்ப்பாணத் தமிழ் பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலும் தற்போதும் தொடர்ந்து இருப்பது ஒரு தனிச்சிறப்பாகும்.

மறைந்து போன தமிழ் சொற்களை
தேடி எடுப்போம்
தெவிட்டாத இன்பம் காண்போம்

2260
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments