சில அழகு குறிப்புகள்-1:

by saira 2014-02-18 14:29:05

சில அழகு குறிப்புகள்-1:
* உதடுகள் மீது தேன் தடவி வர,குளிர்காலத்தில் ஏற்படும் வெடிப்பு மறைவதோடு புதிய தோலும் விரைவில் தோன்றும்.
* நன்கு கனிந்த வாழைபழத்துடன் ஆலிவ் ஆயில் சேர்த்துப் பிசைந்து முகத்தில் தடவி,சிறிது நேரம் கழித்து முகம் கழுவினால்,முகம் பளபளக்கும்.
* சுடு நீரில் எலுமிச்சைச்சாற்றைப் பிழிந்து ஆவி பிடித்தாலும் முகம் பளபளப்பாகும்.
* தினமும் ஆரஞ்சுப் பழச்சாறு அருந்தினால் சருமம் பளபளப்பாகும்.
* முகத்தில் வரும் சிறு சிறு கட்டிகள் மறைய சந்தனத்தை முகத்தில் பூசி,காய்ந்தவுடன் கழுவ வேண்டும்.
* சந்தனக்கட்டையை எலுமிச்சைச்சாற்றுடன் உரைத்துத் தடவி வர முகப்பரு மறையும்.
* கஸ்தூரி மஞ்சள்,சோற்றுக்கற்றாழை இரண்டையும் சேர்த்து அரைத்துப் பூசினால் பருக்கள் மறையும்.

Tagged in:

1250
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments