தேவையான பொருட்கள்:
அரிசி - 1 கப்
பாசி பருப்பு - 1/2 கப்
மிளகு - 1/2 தேக்கரண்டி
ஜீரகம் - 1/2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 1
இஞ்சி - 2" துண்டு
கருவேப்பில்லை - 1 கொத்து
முந்திரி - 25 g
பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
நெய் - 1 குழிக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. பாசிப்பருப்பை கழுவி வாசம் வரும் வரை வருத்துகொள்ள வேண்டும்.
2. அரிசியை கழுவி வருது வெய்த பாசிப்பருப்புடன் குக்கரில் பெருங்காயம் சேர்த்து ஒன்றுக்கு 4 கப் தண்ணீர் சேர்த்து 5 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்.
3. பிறகு நெய் சூடாக்கி அதில் கருவேப்பில்லை, மிளகு, ஜீரகம் சேர்த்து பொரிய விட வேண்டும்.
4. பொரிந்ததும் நறுகின பச்சைமிளகாய் மற்றும் நறுக்கிய இஞ்சி சேர்த்து வதாக வேண்டும்.
5. கடைசியாக முந்திரி சேர்த்து தீயை அணைத்து விட வேண்டும்.
6. தாளித்தவைகளை வேகவைததுடன் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
சுவையான பொங்கல் தயார் ................