படம் ஆலயமணி - மானாட்டம் தங்க மயிலாட்டம்

by Sanju 2010-02-04 19:22:59

படம் : ஆலயமணி
விஸ்வனாதன்-ராமமூர்த்தி

பாடல்: மானாட்டம் தங்க மயிலாட்டம்
குரல்: பி சுஷீலா
வரிகள்: கண்ணதாசன்


மானாட்டம் தங்க மயிலாட்டம் பூவாட்டம் வண்ணத் தேராட்டம்
தானாடும் மங்கை சதிராட்டம் கண்டு தேனோடும் எங்கும் நதியாட்டம்

(மானாட்டம்)

செண்டிருக்கும் அதில் வண்டிருக்கும் அதைக் கண்டிருக்கும் கண்கள் வந்திருக்கும் (2)
சொல்லிருக்கும் அதில் சுவையிருக்கும் இன்பத் துணையிருக்கும் நெஞ்சில் உறவிருக்கும்

(மானாட்டம்)

பாய்ந்துவரும் கண்கள் மேய்ந்துவரும் தலை சாய்ந்துவரும் வெட்கம் சேர்ந்துவரும் (2)
ஆடிவரும் வெல்லம் பாடிவரும் பெண்ணைத் தேடிவரும் இன்பம் கோடிபெறும்

(மானாட்டம்)

Tagged in:

1822
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments