கப்பலோட்டிய தமிழன் - காற்று வெளியிடைக் கண்ணம்மா

by Sanju 2010-02-09 22:28:36

கப்பலோட்டிய தமிழன்
பாடல்: காற்று வெளியிடைக் கண்ணம்மா
குரல்: P B ஸ்ரீநிவாஸ், பி சுஷீலா


காற்று வெளியிடைக் கண்ணம்மா
நின்றன் காதலையெண்ணிக் களிக்கின்றேன்

அமுதூற்றினை ஒத்த இதழ்களும்...இதழ்களும்
நிலவூரித் தடும்பும் விழிகளும்
பத்து மாற்றுப் பொன்னொத்த நின் மேனியும்
இந்த வையத்தில் யானுள்ள மட்டிலும்
எனை வேற்று நினைவின்றித் தேற்றியே
இங்கோர் விண்ணவனாகப் புரியுமே
இந்தக்

(காற்று)

நீ எனதின்னுயிர் கண்ணம்மா ஆ...
நீ எனதின்னுயிர் கண்ணம்மா
எந்த நேரமும் நின்றனைப் போற்றுவேன்
துயர் போயின போயின துன்பங்கள்
நினைப் பொன்னெனக் கொண்ட பொழுதிலே
எந்தன் வாயினிலே அமுதூறுதே
கண்ணம்மாவென்ற பேர் சொல்லும் போழ்திலே
கண்ணம்மா...கண்ணம்மா...
கண்ணம்மாவென்ற பேர் சொல்லும் போழ்திலே
எந்தன் வாயினிலே அமுதூறுதே
உயிர்த் தீயினிலே வளர் சோதியே
எந்தன் சிந்தனயே எந்தன் சித்தமே

(காற்று)

Tagged in:

1869
like
1
dislike
0
mail
flag

You must LOGIN to add comments