கர்ணன் - கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே
        by Sanju[ Edit ] 2010-02-09 22:30:34 
         
        
        	கர்ணன்
விஸ்வனாதன்-ராமமூர்த்தி
பாடல்:	கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே
குரல்:	பி சுஷீலா
வரிகள்:	கண்ணதாசன்
கண்கள் எங்கே...நெஞ்சமும் எங்கே...கண்டபோதே சென்றன அங்கே...
கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே கண்டபோதே சென்றன அங்கே
கால்கள் இங்கே நெளியும் இங்கே (2)
காவலின்றி வந்தன இங்கே ஆஅ...
(கண்கள்)
மணி கொண்ட கரமொன்று அனல் கொண்டு வெடிக்கும் அனல் கொண்டு வெடிக்கும் (2)
மலர் போன்று இதழின்று பனி கொண்டு துடிக்கும் (2)
துணை கொள்ள அவனின்றித் தனியாக நடிக்கும்
துயிலாத பெண்மைக்கு ஏனிந்த மயக்கம் ஆஅ...
(கண்கள்)
இனமென்ன குலமென்ன குணமென்ன அறியேன் குணமென்ன அறியேன்
ஈடொன்றும் கேளாமல் எனையங்கு கொடுத்தேன்
கொடை கொண்ட மதயானை உயிர் கொண்டு நடந்தான்
குறை கொண்ட உடலோடு நானிங்கு மெலிந்தேன்
(கண்கள்)