எனக்கு பிடித்த பாடல் .....காதலின் தீபம் ஒன்று,

by prema 2010-05-17 17:37:30

காதலின் தீபம் ஒன்று,
ஏற்றினாளே என் நெஞ்சில்.
ஊடலில் வந்த சொந்தம்,
கூடலில் கண்ட இன்பம்.
மயக்கம் என்ன,காதல் வாழ்க.

நேற்று போல் இன்று இல்லை,
இன்று போல் நாளை இல்லை.
அன்பிலே வாழும் நெஞ்சில்,
ஆயிரம் பாடலே.
ஒன்றுதான் எண்ணம் என்றால்,
உறவு தான் ராகமே.
எண்ணம் யாவும் சொல்லவா.

(காதலின் தீபம் ஒன்று)

என்னை நான் தேடி தேடி,
உன்னிடம் கண்டுக் கொண்டேன்.
பொன்னிலே பூவை அள்ளும்,
புன்னகை மின்னுதே.
கண்ணிலே காந்தம் வைத்த
கவிதையை பாடுதே.
அன்பே இன்பம் சொல்ல வா.

(காதலின் தீபம் ஒன்று)


Smile

Tagged in:

2294
like
1
dislike
0
mail
flag

You must LOGIN to add comments