முத்தப் பருவம் - முருகன் பிள்ளைத்தமிழ்

by Geethalakshmi 2010-05-28 17:16:21

முத்தப் பருவம் - முருகன் பிள்ளைத்தமிழ்


கடலிடைக் குளித்து கடலாழம் கண்டு

கொண்டுவரும் முத்து

மடலிடை வெள்ளமென 'கட கட' வென்று

காதலியர் சிரிக்க வந்துதிரும் முத்து

அட, அத்தனை முத்தும் கண்டாலும்

நின்னொரு முத்தம் சுவைத்திட்டால்

தேடவும் வேண்டுமோ தெய்வலொக அமுதே

முத்தமிழே முத்தமருளே!

தடந்தோள் குமரா! ஆறு முகனே!

அழகான முத்தமருளே!
1972
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments