Attrai Thingal -poem
        by RAJA10May[ Edit ] 2011-01-21 12:20:27 
         
        
        	அற்றை திங்கள் காய்ந்திடும் 
அந்தி மாலை வேலையில் 
செவிகள் கேட்ட தோர்சுகம்
கருவிழி நட்ட நடுவிலே 
சிலை போன்ற கன்னி எதிரிலே 
மலை போன்ற தும்விழி மறைவிலே
நான் கட்டில்மேலே சாய்ந்ததும்
அவள் முகம் எதிரே தோன்றும்
தென்றல் வீசும் போதெல்லாம்
அவள் குரல் எங்கோ கேட்டிடும் 
மாலை வான பொன்னிறம்
அவள் நிறம் அதை வென்றிடும்
வெண்பனி மூடிய புல்வெளி
அடிகடி இமைக்கும் மைவிழி
எல்லாம் சேர்ந்த பெண்ணினம்
அவள் போல யாருமில்லை