Bookmark Your Favourite Videos

by Naveenkumar 2012-07-18 13:01:39

வீடியோ இணையதளங்களின் மன்னன் YouTube, தனது இணைய வீடியோக்களில் சமீபத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. அது, உங்களுக்கு பிடித்த வீடியோவை தற்சமயம் பார்க்க இயலவில்லை எனில் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என வரிசையில் வைப்பது. நீங்கள் ஒரே ஒரு கிளிக் செய்வதன் மூலம் Watch Later வரிசையில் தற்போதைய வீடியோவை சேர்க்க முடியும். இது மிகவும் எளிதானது இதன் மூலம் நீங்கள் நேரம் கிடைக்கும் போது இந்த ‘வரிசையாக்கப்பட்ட’ (watch later) வீடியோக்களை பார்க்க முடியும்.

இருப்பினும் இதில் ஒரு சிறிய பிரச்சனை உள்ளது. , YouTube மிக பிரபலமான வீடியோ பகிர்வு இணையதளம் தான். ஆனால் யூடியுப் மட்டுமே வீடியோ பகிர்வு இணையதளம் அல்ல. நீங்கள் வழக்கமாக பார்க்கும் Vimeo, TED, FaceBook மற்றும் பிற வீடியோ பகிர்வு தளங்களில் உள்ள உங்களுக்கு பிடித்த வீடியோக்களை இது போல் Watch Later வரிசையில் வைக்க இயலாது. ஆனால் இதற்க்கு ஒரு வழி இருக்கிறது.

RadBox, நீங்கள் ஒரு பொதுவான வரிசையில் பல்வேறு வீடியோ தளங்களில் வரும் உங்களுக்கு பிடித்தமான வீடியோக்களை சேகரித்து, உங்கள் டெஸ்க்டாப் கணினி அல்லது ஐபாட் இல் பின்னர் அவற்றை பார்க்க உதவும் ஒரு பயனுள்ள இணைய தளம்.

நீங்கள் இரண்டு வழிகளில் RadBox வரிசையில் வீடியோக்களை சேமிக்க முடியும். இதில் உட்பொதிக்கப்பட்ட வீடியோ அடையாளம் என்று ஒரு கிளிக் புக்மார்க்லேட் (one-click bookmarklet) இருக்கிறது இதன் மூலம் வீடியோவை வரிசையில் சேமிக்கலாம். அல்லது, நீங்கள் உங்கள் மொபைலில் இருந்து குறிப்பிட்ட இமெயில் முகவரிக்கு விடியோவின் URL ஐ இமெயில் செய்வதன் மூலம் அந்த வீடியோவை Watch Later வரிசையில் சேர்க்கலாம்.

Radbox ன் watch later வரிசையில், YouTube, Vimeo, College Humar, DailyMotion, Blip.tv மற்றும் பல பிரபலமான வீடியோ வலைத்தளங்களில் உள்ள வீடியோக்களை வரிசைப்படுத்த முடியும் என்பது சிறப்பு.
815
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments