படம் அடுத்த வாரிசு - ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா

by Sanju 2010-02-04 17:53:17

படம் : அடுத்த வாரிசு
பாடல்: ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா
குரல்: மலேஷியா வாசுதேவன்
வரிகள்: கங்கை அமரன்


ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா
போதும் போதும் என போதை தீரும் வரை வா
தினம் ஆடிப் பாடலாம் பல ஜோடி சேரலாம்
மனம் போல் வா கொண்டாடலாம் (2)

(ஆசை)

என்ன சுகம் தேவை எந்த விதம் தேவை சொல்லித்தர நானுண்டு
பள்ளியிலே கொஞ்சம் பஞ்சணையில் கொஞ்சம் அள்ளித்தர நீயுண்டு
இங்கு சொர்க்கம் மண்ணில் வரும் சொந்தம் கண்ணில் வரும் வா (2)
தினம் நீயே செண்டாகவே அங்கு நாந்தான் வண்டாகுவேன்

(ஆசை)

முத்து நகை போலே சுற்றி வரும் பெண்கள் முத்தமழை தேனாக
வந்த வரை லாபம் கொண்ட வரை மோகம் உள்ளவரை நீயாடு
இங்கு பெண்கள் நாலு வகை இன்பம் நூறு வகை வா (2)
தினம் நீயே செண்டாகவே அங்கு நாந்தான் வண்டாகுவேன்

(ஆசை)

Tagged in:

1897
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments