படம் அவர்கள் - காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி

by Sanju 2010-02-04 18:59:03

படம் : அவர்கள்
எம் எஸ் விஸ்வனாதன், 1977

பாடல்: காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி
குரல்: எஸ் ஜானகி
வரிகள்: கண்ணதாசன்


காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி
கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கி விடாது
மங்கை நெஞ்சம் பொங்கும்போது விலங்குகள் ஏது

நான் வானிலே மேகமாய்ப் பாடுவேன் பாடல் ஒன்று
நான் பூமியில் தோகைபோல் ஆடுவேன் ஆடல் ஒன்று
கன்றுக்குட்டி துள்ளும்போது காலில் என்ன கட்டுப்பாடு
காலம் என்னை வாழ்த்தும்போது ஆசைக்கென்ன தட்டுப்பாடு

(காற்றுக்கென்ன)

தேர் கொண்டுவா தென்றலே இன்று நான் என்னைக் கண்டேன்
சீர் கொண்டுவா சொந்தமே இன்றுதான் பெண்மை கொண்டேன்
பிள்ளை பெற்றும் பிள்ளை ஆனேன் பேசிப் பேசி கிள்ளை ஆனேன்
கோவில் விட்டு கோவில் போவேன் குற்றம் என்ன ஏற்றுக் கொள்வேன்

(காற்றுக்கென்ன)

Tagged in:

2053
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments