படம் இந்திரா - நிலாக் காய்கிறது

by Sanju 2010-02-04 19:54:28

படம் : இந்திரா
ஏ ஆர் ரஹ்மான்

பாடல்: நிலாக் காய்கிறது
குரல்: ஹரிணி
வரிகள்: வைரமுத்து


நிலாக் காய்கிறது நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே
இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்
தென்றல் போகின்றது சோலை சிரிக்கின்றது யாரும் சுகிக்கவில்லையே
இந்தக் கைகள் மட்டும் உன்னைத் தீண்டும்
காற்று வீசும் வெய்யில் காயும் காயும் அதில் மாற்றம் ஏதும் இல்லையே
ஆஆஆ...வானும் மண்ணும் நம்மை வாழச் சொல்லும் அந்த வாழ்த்து ஓயவில்லை
என்றென்றும் வானில்

(நிலாக்)

அதோ போகின்றது ஆசை மேகம் மழையைக் கேட்டுக் கொள்ளுங்கள்
இதோ கேட்கின்றது குயிலின் பாடல் இசையைக் கேட்டுக் கொள்ளுங்கள்
இந்த பூமியே பூவனம் உங்கள் பூக்களைத் தேடுங்கள்
இந்த வாழ்க்கையே சீதனம் உங்கள் தேவையைத் தேடுங்கள்

(நிலாக்)

Tagged in:

1830
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments