காதல் கவிதை - அலைமீது விளையாடும்
        by Sanju[ Edit ] 2010-02-09 22:33:06 
         
        
        	காதல் கவிதை
இளையராஜா
பாடல்:	அலைமீது விளையாடும்
குரல்:	பவதாரணி
வரிகள்:	அகத்தியன்
ஆ...ஆ...ஆ... அலைமீது விளையாடும் இளம் தென்றலே
அலை பாயும் இள நெஞ்சை கரை சேர்த்து வா
உலகாளும் மாமன்னன் மனதென்னவோ
உயிர் வாழ ஒரு வார்த்தை நீ கேட்டுவா
மாலை அந்தி மாலை வந்து என்னை மயக்கும்
ஓலை அவன் ஓலை பெற உள்ளம் துடிக்கும்
தென்றல் என்னை அழைக்கும்
தேகம் தொட்டுத் துளைக்கும்
அவன் நினைவு எங்கே ஒரு மாது உருக
இள்வேணில் தீண்டும் இளம் தொல்லை பெருக
என் நிலையை அறிவானோ வருவானோ ஓ ஹோ ஓ ஹோ....
அலைமீது விளையாடும் இளம் தென்றலே
அலை பாயும் இள நெஞ்சை கரை சேர்த்து வா
உலகாளும் மாமன்னன் மனதென்னவோ
உயிர் வாழ ஒரு வார்த்தை நீ கேட்டுவா