கிழக்கு வாசல் - பாடிப் பறந்த கிளி
        by Sanju[ Edit ] 2010-02-09 23:06:36 
         
        
        	கிழக்கு வாசல்
இளையராஜா
பாடல்:	பாடிப் பறந்த கிளி
குரல்:	எஸ் பி பாலசுப்ரமணியம்
வரிகள்:	ஆர் வி உதயகுமார்
பாடிப் பறந்த கிளி
பாத மரந்ததடி பூமானே
ஆத்தாடி தன்னாலே கூத்தாடி நின்றேனே
கேட்காத மெட்டெடுத்து வாரேன் நானே
(பாடிப் பறந்த)
சொல்லெடுத்து வந்த கிளி நெஞ்செடுத்துப் போனதடி
நெல்லறுக்கும் சோலையொண்ணு செல்லரிச்சிப் போனதடி
கணட கனவு அது காணாதாச்சு
கண்ணுமுழிச்சா அது வாராது
வட்ட நெலவு அது மேலே போச்சு
கட்டியிழுத்தா அது வாராது
சேதாரம் செஞ்சவரு யாரு யாரு
(பாடிப் பறந்த)
ஒத்தயடிப் பாதையில நித்தமொரு கானமடி
அந்த வழி போகையில காலு ரெண்டும் ஊனமடி
கல்லிலடிச்சா அது காயம் ஆறும்
சொல்லிலடிச்சா அது ஆறாது
பஞ்சு வெடிச்சா அது நூலாப்போகும்
நெஞ்சு வெடிச்சா அது தாங்காது
வீணாச தந்தவரு யாரு யாரு
(பாடிப் பறந்த)