Duet - En Kadhalae Lyrics

by Sanju 2009-10-31 15:05:54

Duet - En Kadhalae Lyrics



என் காதலே என் காதலே ,
என்னை என்ன செய்யப் போகிறாய்?
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ ,
ஏன்? கண்ணிரெண்டை கேட்கிறாய்?

சிலுவைகள் சிரகுகல் ,
ரெண்டின் என்ன தரப் போகிறாய்?
கிள்ளுவதைக் கிள்ளிவிட்டு ,
ஏன்? தள்ளி நின்று பார்கிறாய்?

காதலே நீ பூ எறிந்தால்
எந்த மலையும் கொஞ்சம் குலையும்,
காதலே நீ கல் எறிந்தால்
எந்த கடலும் கொஞ்சம் கலங்கும்
இனி மீள்வதா இல்லை வீழ்வதா ?
உயிர் வாழ்வதா இல்லை போவதா ?
அமுதென்பதா விஷம் என்பதா?
இல்லை அமுத-விஷமென்பதா ?

காதலே உன் காலடியில்
நான் விழுந்து விழுந்து தொழுதேன்
கண்களை நீ மூடிக்கொண்டாய்
நான் குலுங்கி குலுங்கி அழுதேன்
இது மாற்றமா தடுமாற்றமா ?
என் நெஞ்சிலே, பனி மூட்டமா?
நீ தோழியா? இல்லை எதிரியா?
என்று தினமும் போராட்டமா ?

என் காதலே என் காதலே ,
என்னை என்ன செய்யப் போகிறாய்?
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ ,
ஏன்? கண்ணிரெண்டை கேட்கிறாய்?

Tagged in:

930
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments