படம் அலை ஓசை - நீயா அழைத்தது

by Sanju 2010-02-04 18:58:35

படம் : அலை ஓசை
இளையராஜா

பாடல்: நீயா அழைத்தது


நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது
சிலிர்க்கிறேன் வென்னீர் ஆற்றில் குளிக்கிறேன்
தவிக்கிறேன் என்னை நானே அணைக்கிறேன்
சிரிக்கிறேன் தனிமையில் எனை

(நீயா)

தண்ணீரில் வெண்ணிலவு நீராடுமா
வெண்ணிலவு தரைவந்தால் ஆரோடுமா
பெண்மை குளித்ததில் தனை மறந்தது நீரோடை
தரையில் இருந்தது காற்றில் பறந்தது மேலாடை
காற்றே வாழ்க காதல் தேவன் நன்றி சொல்கிறான்
என்ன லீலை கண்ணன் வேலை
இலைகளில் உடை கொடு இல்லை ஒரு வழி விடு

(நீயா)

தலைவனே விரைவினில் பெண் பார்க்க வா
காலங்கள் கனியட்டும் கை சேர்க்க வா
சேலைப் பூக்களில் தேனை தேடுது பொன்வண்டு
ஆசை நதியினில் ஆழம் பார்கிற நாளென்று?
எண்ணி எங்கும் கன்னி நெஞ்சம் பள்ளி கொள்ளுமா?
கேள்வி என்ன கேலி என்ன
என்ன இதில் வரைமுறை தென்றல் தொடும் இதுவரை

(நீயா)

Tagged in:

2101
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments